தனிநபர் கடன் வாங்கினால் வருமான வரி விலக்கு கோர முடியாது. ஆனால் வருமான வரி சட்ட பிரிவு 24B படி வீட்டை மறுசீரமைப்பு செய்ய தனிநபர் கடன் வாங்கினால், அதற்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். ஒரு நிதியாண்டில் 30000 வரை கடனுக்காக செலுத்திய வட்டி தொகையில் வருமான வரி விலக்கு கோரலாம். இதே போல வெளிநாட்டில் படிக்க தனி நபர் கடன் வாங்கினாலும் நாம் செலுத்தும் மொத்த வட்டி தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும்.