உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூரில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று வேகமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.