ரிமல் புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுப்பெற்று நள்ளிரவு வங்கதேச -கேப்புப்பாராவிற்கு மேற்கு வங்காளம் சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது சூறாவளி காற்று மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

மேலும் குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.