டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் சிறப்பு மருத்துவமனை ஆகும். இந்த விபத்தில் 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.