இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் யாராவது டிக்கெட்டை ரத்து செய்தால் அந்த இருக்கைகளை மற்ற பயணிகளுக்கு முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே துறை தற்போது கொண்டு வந்துள்ளது.

ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்யலாம். ஐ ஆர் சி டி சி செயலியில் உள்ள ரயில் சின்னத்தை கிளிக் செய்தால் காலி இட அட்டவணையில் காலியிட விவரங்கள் கிடைக்கும். ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் உள்ள ஆன்லைன் விளக்க படங்களில் ரயில் மற்றும் பயண விவரங்களை உள்ளிட்டு ரயில் அட்டவணையை பெறு என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் காலியிடங்கள் இருந்தால் முன்பதிவு செய்து கொள்ளலாம்.