உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில் தலித் பெண் ஒருவர் திடீரென பிரசவ வலியால் துடித்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் சாலையோரம் உள்ள முட்புதர்களுக்கு அழைத்துச் சென்று சேலையை போர்த்தி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உள்ளனர். இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.