இன்றைய காலகட்டத்தில் நாம் ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது அந்த இடம் தெரியாத நிலையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி அதன் மூலமாக அந்த இடத்தை சென்று அடைவோம். அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த நான்கு பேர் கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். பெண் உட்பட நான்கு பேரும் ஒரே காரில் ஒன்றாக பயணித்து உள்ளனர். கேரளாவில் பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்துள்ளார்கள்.

பின்னர் ஆலப்புழாவிற்கு செல்லும் வழி தெரியாததால் அவர்கள் கூகுள் மேப்பில் வழி பார்த்து சென்றுள்ளார்கள். அப்பொழுது குருபந்தரா என்ற இடத்தில் சாலையில் சென்ற நீரோடையில் மாட்டி கொண்டுள்ளனர். இதனையடுத்து நீரில் மூழ்கி உயிருக்கு போராடியவர்களை அங்குள்ள மக்கள் மீட்டு உள்ளனர். மேலும்அவர்கள் வந்த கார் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.