கர்நாடக மாநிலத்தில் கிரகலட்சுமி திட்டம் வருகின்ற ஆகஸ்டு 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றுள்ள நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் இரண்டு ரூபாய் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி மைசூரில் வயநாடு எம் பி ராகுல் காந்தி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக 1.30 கோடி பெண்கள் பயன்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திட்டத்தில் தகுதி மற்றும் விண்ணப்ப விவரங்கள் குறித்த முக்கிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது இந்த திட்டத்தின் கீழ் பயன்பட பெண்கள் அந்தியோதயா, பிபிஎல் மற்றும் ஏபிஎல் குடும்ப அட்டையை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இந்த ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவர்களாக அங்கீகரிக்கப்பட்ட பெண்களுக்கு இதன் பலன்கள் கிடைக்கும்.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும்.

அரசு பணியாற்றும் அல்லது வரி செலுத்தும் பெண்கள், கணவர்கள் வருமான வரி செலுத்தும் அல்லது ஜிஎஸ்டி வருமானத்தை தாக்கல் செய்யும் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சேவா சிந்து உத்திரவாத திட்டங்கள் என்ற போர்க்களுக்கு சென்று அதில் கிரகலட்சுமி யோஜனா என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் தோன்றும் பெட்டியில் இணைப்பை கிளிக் செய்து தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டும். இறுதியாக சமர்ப்பித்தால் உங்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்படும்.