ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவிற்குள் புல் அறுப்பதற்காகச் சென்ற ஏழைப் பெண்கள் குழுவினர் எதிர்கொண்ட எதிர்பாராத விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரியல் பூங்காவிற்குள் அமைதியாகக் கூண்டில் அமர்ந்திருந்த புலியைப் பார்த்துவிட்டுப் பெண்கள் தங்களது வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென மர்ம நபர் ஒருவர் புலியின் கூண்டு வாசலைத் திறந்துவிட்டுள்ளார்.

கூண்டு திறக்கப்பட்டதை அறிந்த புலி உடனடியாக வெளியே பாய்ந்து வந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் அலறல் சத்தமும் எழுந்தது. உயிர் தப்புவதற்காக அங்கிருந்த பெண்கள் அருகில் இருந்த மரங்கள் மற்றும் வலைகளின் மீது ஏறித் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.

இந்த திடீர் தாக்குதலில் சுனா தேவி என்ற ஏழைப் பெண் துரதிர்ஷ்டவசமாகப் புலியின் பிடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கைக்குழந்தைகளுடன் வசித்து வந்த ஏழைத் தாயின் இந்த திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புல் அறுக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட பொறாமை மற்றும் முன்விரோதம் காரணமாகவே வேண்டுமென்றே யாரோ திட்டமிட்டுப் புலியின் கதவைத் திறந்திருக்க வேண்டும் என்று சம்பவப் பகுதியில் நின்ற மற்ற பெண்கள் கதறிழுது குற்றம்சாட்டியுள்ளனர். உயிரியல் பூங்காவின் பாதுகாப்பு வழிமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கும் இந்தச் சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணத் தவறியதாகவும், கதவைத் திறந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட காவலாளியை வனத்துறை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிய உயர் மட்ட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

“>

 

உயிரியல் பூங்காக்களில் நிலவும் இது போன்ற கடுமையான பாதுகாப்பு வீழ்ச்சிகள் மற்றும் அலட்சியப் போக்குகள் எதிர்காலத்தில் இது போன்ற விலைமதிப்பற்ற மனித உயிர்களைப் பலிவாங்காமல் இருக்க அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.