அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்த kelsey Hatcher (32) என்பவருக்கு இரண்டு கருப்பைகள் இருந்ததால் ஒரே நேரத்தில் இரண்டு முறை கர்ப்பம் தரித்தார். மருத்துவ வரலாற்றில் இது போன்ற சம்பவம் அரிது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தப் பெண் இரண்டு கருப்பைகள் மூலம் இரண்டு வெவ்வேறு நாட்களில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். அவருக்கு முதல் குழந்தை டிசம்பர் 19ஆம் தேதி காலையிலும் மற்றொரு குழந்தை டிசம்பர் 20ஆம் தேதி காலையிலும் பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.