இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியை அடைந்துவிட்டது. தற்பொழுது உலகம் முழுவதுமேAI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது. அதாவது மனித தேவைகளை குறைக்கும் விதமாக இந்த தொழில்நுட்பத்தின் மூலமாகவே செய்திகள் வாசிப்பது என ஏகப்பட்ட தொழில்நுட்பம் வர ஆரம்பித்துவிட்டது. அந்தவகையில் ஒருவருக்கு எப்போது மரணம் வரும் என்பதை AI மூலம் கண்டறிய முடியும்.

ஒவ்வொரு நாளும் பல புதிய AI மாடல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், மரணத்தை துல்லியமாக கணிக்கும் AI டூலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Life2vec என்ற அல்காரிதம் தான் இந்த துல்லியமான கணிப்புகளைக் கொடுக்கிறது. நம்மை பற்றி வெறும் 4 கேள்விகளுக்கு நாம் பதிலளித்தால் போதும், இந்த தரவுகளை வைத்துக்கொண்டு ஒருவர் எப்போது இறப்பார் என்பதை துல்லியமாக கணித்துச் சொல்லும். இது 75% சரியாக கணிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.