பிளஸ் டூ முடித்தவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட மேற்படிப்பில் சேர்வார்கள். இதில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மத்திய அரசின் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் வீட்டு முகவரி, அருகில் உள்ள வங்கியின் பெயர், என்ன படிப்பு, என்ன கல்லூரி, கல்வி கட்டண விவரம் மற்றும் அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இணையதள ஆய்வுக் குழு பரிசீலனை செய்த பிறகு தொடர்புடைய வங்கிக்கு பரிந்துரை செய்யும். இதனை தொடர்ந்து கல்வி கடன் வழங்கப்படும்.