1975 ஆம் ஆண்டில், ஓக்லஹோமா மதுபான விடுதியில் நடந்த திருட்டு முயற்சியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி,  கிளின் சிம்மன்ஸ் மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். சிம்மன்ஸ் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும்  குற்றம் நடந்த நேரத்தில் தான் லூசியானாவில் இருந்ததாக கூறி தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தீவிரமாக போராடி வந்தார் . இருந்தபோதிலும், சிம்மன்ஸ்- க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.

48 ஆண்டுகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்த சிம்மன்ஸ், கடந்த ஜூலை மாதம் விடுதலை செய்யப்பட்டார். தற்போது கல்லீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் சிம்மன்ஸ் உள்ளார்.  சிம்மன்ஸ்,  பொறுமை மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஒரு பாடமாக தனது தவறான சிறைவாசத்தை பிரதிபலிக்கிறார். இருப்பினும், அவரது விடுதலை சமூக ஊடகங்களில் விமர்சனத்தைத் தூண்டியது,

தவறான தீர்ப்பால் தவறேதும் செய்யாமல் தண்டனை அனுபவித்த அவரது இளமை காலத்தை யார் விட்டு தருவார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் . மேலும் ஓக்லஹோமா மாநில தண்டனைச் சட்டத்தின் கீழ், தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் $175,000 வரை இழப்பீடு பெறலாம், என்பது குறிப்பிடத்தக்கது.