புதிய கொரோனா வைரஸ் பரவுவது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு தோன்றுவது குறித்து அச்சம் அதிகரித்துவருகிறது. ஆனால் இது கொரோனாவின் திரிபு தானே தவிர, தேவையின்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பாக இருக்கவேண்டும். பொதுஇடங்களுக்கு செல்லும் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என அவர் தெரிவித்தார்.