கடந்த வருடம் ட்விட்டரை (X) விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் ஆட்குறைப்பு, பெயர் மாற்றம், பயனாளிகளுக்கு சந்தா என பல மாற்றங்களை கொண்டு வந்தார். இந்நிலையில் தற்போது ட்விட்டர் மூலமாக பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய போது பண பரிமாற்றம் செய்வதற்கான உரிமை பெற அரசாங்கத்திடம் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் ஒப்புதல் கிடைத்த பிறகு 2024 நடுப்பகுதியில் இருந்து இந்த சேவை தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.