எம்பி தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக அண்ணாமலை வெள்ளை அறிக்கை கேட்கிறார், அவருக்கு வெள்ளரிக்காய் வேண்டுமானால் வாங்கி தருகிறோம். எய்ம்ஸ் வருகிறது என்று தமிழ்நாட்டுக்கு பாஜக அல்வா கொடுத்துள்ளது. தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு அல்வா கொடுக்க தயாராக உள்ளதாக ஆர் எஸ் பாரதி விமர்சித்துள்ளார்.