மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல என்றும், அவர்களுக்கு அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே ஒரே நோக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

​அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதல்வர் ஸ்டாலின் விடுத்த சவாலுக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், “முதல்வர் சவால் விடுவது ஆச்சரியமளிக்கிறது; இதன் மூலம் அவர் தனது வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார்” எனச் சாடினார். நிதி விவகாரத்தில் மத்திய – மாநில அரசு இடையே நிலவும் இந்த நேரடி மோதல் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.