தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பமாக, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது அதிகாரப்பூர்வ ஆதரவை வழங்கியுள்ளது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு, விசிக-வின் ஆதரவுக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஆதவ் அர்ஜுனா, தவெக ஆட்சி அமைப்பது இப்போது உறுதியாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேட்டியளித்த ஆதவ் அர்ஜுனா, வெற்றி.. வெற்றி.. “எங்களுக்கு ஆதரவு அளித்த விசிக உள்ளிட்ட அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்; மக்களின் பேராதரவுடன் தமிழகத்தில் விரைவில் ஒரு நல்லாட்சி அமையும்” என உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

“>

 

விசிக-வின் இந்தத் திடீர் ஆதரவு மூலம் விஜய்யின் முதலமைச்சர் கனவு நனவாகிவிட்டதாக அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்த மெகா கூட்டணியால் கோட்டை அரியணையில் விஜய் அமர்வது இப்போது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளதோடு, தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் பிறந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.