தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான இழுபறி நீடித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தற்போது தனது ஆதரவை அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி வரும் சூழலில், திருமாவளவனின் இந்த ஆதரவு விஜய்க்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு வராததால் தவெகவினர் போராட்டங்களில் இறங்கியுள்ள நிலையில், திருமாவின் இந்த முடிவு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மெஜாரிட்டியை நிரூபிப்பதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், இந்த புதிய கூட்டணி தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.