2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் பிறப்பையொட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில், இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்ததாகவும், வளமான ஆண்டாகவும் அமையட்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

“>

 

மேலும், இந்த ஆண்டில் ஒவ்வொருவருக்கும் நல்ல ஆரோக்கியமும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், செய்யும் பணிகளில் முழுமையான நிறைவும் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சமூகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் கோவில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் திரண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் விடுத்துள்ள இந்த நல்லிணக்க வாழ்த்துச் செய்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது.