இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதன்படி தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் கிளி ஒன்று இளநீரை துளையிட்டு குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது.

ஆறறிவு படைத்த மனிதர்கள் இதில் அவதிப்படும் நிலையில் ஐந்தறிவு படைத்த பறவைகள் மற்றும் விலங்குகளும் அவதிப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் கிளி ஒன்று மரம் ஒன்றில் அமர்ந்து கொண்டு சிறிய இளநீரை தனது வாயால் துளையிட்டு அசால்டாக குடித்துள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nomadic Waters இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nomadicwaters)