ஹரியானாவின் சர்ச்சைக்குரிய சாத்லோக் ஆசிரம சாமியார் பாபா ராம்பால், சுமார் 11 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 24 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், அவர் காட்டிய விவிஐபி (VVIP) ‘ஸ்வாக்’ வீடியோ இணையத்தில் நெட்டிசன்களின் வாயைப் பிளக்க வைத்துள்ளது.
டெல்லி மற்றும் ஹரியானாவில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலில், சிறையிலிருந்து வெளியே வந்த சாமியார் ராம்பால் சொகுசாக நடந்து வர, அவருக்குக் குளிர்ச்சியான காற்றைத் தருவதற்காகப் பிரம்மாண்டமான நகரும் ஏசி கூலர்கள் (Moving Coolers) அவர் செல்லும் இடமெல்லாம் பின்னாடியே அணிவகுத்துச் செல்லும் வினோத வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய்ப் பரவி வருகிறது.
संत रामपाल का वीवीआईपी ट्रीटमेंट देखिए,दो-दो कूलर चल रहे हैं।
अब सवाल यह उठता है कि अगर इतनी सुविधाओं की आदत है, तो आखिर 11 साल जेल में कैसे बिताए होंगे? या फिर वहां भी इंतज़ाम किसी खास मेहमान जैसे ही रहे होंगे? pic.twitter.com/KuqCqn3uKz— TisariNazar (@TisariNazar) May 19, 2026
“எங்க வீட்ல ஒரு ரூம்ல இருந்து இன்னொரு ரூமுக்கு கூலரைத் தூக்கிட்டுப் போகவே நாக்கு தள்ளிடுது, இங்க என்னடான்னா சாமியாருக்குப் பின்னாடியே கூலரே வாக் போகுது!” என்று நெட்டிசன்கள் இந்த விஐபி ட்ரீட்மெண்டைக் கிண்டலடித்துக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
78 வயதான பாபா ராம்பால் கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த பெரும் வன்முறை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஹிசார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அவரது வயோதிகத்தைக் கருதி ஜாமீன் வழங்கியிருந்தாலும், அவர் வெளியே சென்று கூட்டத்தைக் கூட்டக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
