இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ஒரு பிரிட்டிஷ் தம்பதியினர், கடந்த 4 மாதங்களாக இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகளில் விதவிதமான உணவுகளை ருசி பார்த்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ‘ஹேசல் மற்றும் லின்சி’ என்ற தம்பதியினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அவர்கள் இந்தியாவுக்குக் கிளம்பும் போது, இந்தியச் சாலையோர உணவுகளைச் சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கப்படும் என்று அவர்களது பிரிட்டன் குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர். ஆனால், அந்த எச்சரிக்கையையும் மீறி, வட இந்தியாவின் காரசாரமான சாட் உணவுகள் முதல் தென்னிந்தியாவின் கடற்கரை பகுதி உணவுகள் வரை அனைத்தையும் இந்தத் தம்பதியினர் தயக்கமின்றி ரசித்துச் சாப்பிட்டுள்ளனர்.
View this post on Instagram
“>
இதுகுறித்து அவர்களிடம், ‘இந்திய உணவுகளின் தரம் மற்றும் சுவை எப்படி இருந்தது?’ என்று கேட்டபோது, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் உணவுகள் கூட இந்தத் தெருவோரக் கடைகளின் சுவைக்கு முன்னால் பயனற்றவை என்று பாராட்டி ரேட்டிங் கொடுத்துள்ளனர்.
மேலும், 4 மாதங்களாக 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சாப்பிட்டும் தங்களுக்கு எந்த ஒரு உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை என்றும், இந்திய உணவுகள் தரத்திலும் சுவையிலும் மிகச் சிறந்தவை என்றும் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
