இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், ராஜ நாகம் ஒன்று தனது இரையை முழுவதுமாக விழுங்கிய பின், வழக்கத்திற்கு மாறாக தன்னுடைய தாடையை ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் சீரமைக்கிறது. பாம்புகள் பொதுவாக இரையை விழுங்கிய பின் ஓய்வெடுக்கும் நிலையில், இந்த ராஜ நாகம் தன் வாயை விரித்து, தனது தாடையை இங்கும் அங்கும் அசைத்துக்கொண்டு ஒரு விசித்திரமான இயக்கத்தில் ஈடுபடுகிறது. இதைக் கண்ட பார்வையாளர்கள் “இதுபோல் பாம்பு நடப்பது முதல் முறை” என அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வீடியோ, @AmazingSights என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “கிங் கோப்ரா தனது இரையை விழுங்கிய பிறகு தன்னுடைய தாடையை மீண்டும் வடிவமைக்க முயற்சிக்கிறது”
என்ற விளக்கத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெறும் சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றதோடு, பல்லாயிரக்கணக்கான லைக்குகளும் பெற்றுள்ளது.
விலங்கியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பாம்பு ஒன்று பெரிய இரையை விழுங்கிய பிறகு, அதன் தாடை எலும்புகள் மற்றும் தசைகள் மீண்டும் இயல்பான நிலைக்குத் திரும்ப சில இயக்கங்களை மேற்கொள்ளும். இதுவே இந்த வீடியோவில் பார்க்கக்கூடிய அசாதாரண நொடிகளாக உள்ளது. மேலும் இதோ அந்த வீடியோ,
King Cobra realigning its jaw after swallowing prey pic.twitter.com/8tp1UFeuzD
— Damn Nature You Scary (@AmazingSights) September 9, 2025
–
