தேவாஸில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தம்பதியினர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில், அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் சென்றபோது, அங்கு வசிக்கும் ஒரு தம்பதியினர் இந்த தீவிர முடிவை எடுத்தனர்.

மேலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை நிறுத்தக்கோரி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், திடீரென தங்கள் உடலின் மீது தீ வைத்துக்கொண்டனர். இந்தத் துயரமான சம்பவத்தில் இருவருக்கும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

“>

இந்த தீக்காயமடைந்த தம்பதியினர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது நிகழ்ந்த இந்த விபரீத முடிவு அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.