எஸ்பிஐ வங்கி எனது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான சலுகையை அறிவித்துள்ளது. கிரீன் ஃபண்டிங் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீட்டு கடன் விதிகளில் பெரிய மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது எஸ்பிஐ தன்னுடைய புதிய விதிகளில் வீட்டு கடன் திட்டங்களில் சோலார் அமைப்பை கட்டாயமாக திட்டமிட்டுள்ளது. அது நடந்தால் வீடுகளின் கூரையில் சோலார் யூனிட்டுகளை நிறுவும்  திட்டங்களுக்கு மட்டுமே எஸ்பிஐ வங்கி கடன்களை அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. இதனுடன் சோலார் தகடு செலவுகள் பசுமை நிலையத்தின் தனிப்பட்ட வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கான கடன் தொகையை எஸ்பிஐ  வங்கி அதிகரிக்கும்.

விண்ணப்பதாரர்களுக்கு இது கட்டாயமாக்கப்படலாம். இந்த கடன் 10 முதல் 20 வருடங்கள் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் வருடம் உலக வங்கி சோலார் ரூப்டாப் நிதி உதவியை தொடங்கியது. இந்த வழியில் உலக வங்கி பல்வேறு வங்கிகளுக்கு நிதி வழங்குகிறது. இதன் மூலம் தூய்மையான காலநிலை குறித்த பிரச்சாரத்தை உலகெங்கும் உள்ள நாடுகள் இணைக்க முடியும் என்று உலக வங்கி நம்புகிறது.