கேரள மாநிலம் கொச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபோர்ட் கொச்சியில், 200 ஆண்டுகள் பழமையான மற்றும் 80 அடி உயரமுள்ள ஒரு ராட்சத மழை மரம், இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை கிறிஸ்துமஸ் மரமாக ஜொலித்து வருகிறது.’வெலி மைதானத்தில்’ அமைந்துள்ள இந்த மரம், சுமார் 1,800-க்கும் மேற்பட்ட மின்விளக்கு சரங்கள், லட்சக்கணக்கான பல்புகள் மற்றும் கண்ணைக் கவரும் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு, காண்போரை வியக்க வைக்கும் வகையில் ஒளிர்கிறது.

இது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட இந்த பாரம்பரியம், இன்று உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு பிரம்மாண்டமான திருவிழாவாக உருவெடுத்துள்ளது. இந்த ‘பிக் ட்ரீ ஃபெஸ்ட்’ திருவிழா, உள்ளூர் மக்களின் கூட்டு முயற்சியால் எந்தவொரு பெரும் ஸ்பான்சர்களும் இன்றி நடத்தப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்.

 

View this post on Instagram

 

A post shared by Fortkochi Live (@fortkochi_live)

“>

இந்நிலையில் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை தினந்தோறும் மாலை வேளைகளில் இந்த மரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டுகிறது. டிசம்பர் 31 அன்று நள்ளிரவில் புகழ்பெற்ற ‘பாப்பாஞ்சி’ எரிக்கப்படும் வரை, இந்த இயற்கை மரம் கொச்சியின் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஒரு மகுடம் வைத்தது போல விளங்கி, அங்கு வரும் மக்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறது.