சபர்மதி ஆற்றின் அழகிய பின்னணியில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள காஸ்வே பகுதியில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. வழக்கமாக பனிச்சறுக்கு வண்டியில் வரும் சாண்டா கிளாஸ், இங்கு சற்று வித்தியாசமாக படகில் வந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
மேலும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகில் சாண்டா கிளாஸ் ஆற்றில் வலம் வந்த காட்சி, கரையில் கூடியிருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
View this post on Instagram
“>
இந்தத் தனித்துவமான கொண்டாட்டத்தின் போது, சாண்டா கிளாஸ் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தார். சூரத் மாநகரின் அமைதியான நீர்நிலைப் பகுதியில் சாண்டாவின் இந்த ‘படகில் வருகை’ பண்டிகை காலத்திற்கு ஒரு புதுமையான மற்றும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வைத் தந்த இந்த நிகழ்வு, உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வைரல் வீடியோக்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
