கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு குடும்பத்தினர் தங்கள் மகளுடன் வசித்து வருகிறார்கள். இந்த குடும்பத்தை சேர்ந்த சிறுமி கடந்த 8-ம் தேதி வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். பின்னர் சிறுமியின் தாய் குளித்தார். இவர்கள் இருவரும் குளித்துக் கொண்டிருந்ததை ஜன்னல் வழியாக ஒரு வாலிபர் செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.
இதனை கவனித்த சிறுமி உடனடியாக தன் தந்தையிடம் கூறிய நிலையில் அவர் வாலிபரை பிடிப்பதற்காக சென்றார். ஆனால் அதற்குள் வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து காஜா மொய்தீன் என்ற 28 வயது வாலிபரை கைது செய்தனர். இவர்தான் ஜன்னல் வழியாக குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.
மேலும் அவரின் செல் போன் மற்றும் வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
