உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பேஸ்புக் லைவ் ஒன்றில் கூறியுள்ளார். அந்த லைவ்வில் அவர் கூறியதாவது, சில வருடங்களுக்கு முன்பு வரை என்னுடைய தொழில் நன்றாக தான் சென்றது. ஆனால் இப்போது எனக்கு அதிகளவு கடன்கள் ஏற்பட்டுள்ளதால் நிதி நிலைமையை நினைத்து மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

மேலும் என்னுடைய மகளுக்கு நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டதால் சில நாட்களாக அவர் இன்சுலின் எடுத்துக் கொண்டிருந்தார். தற்போது எனக்கு ஏற்பட்ட கடன் தொல்லையால் என் மகளின் மருத்துவ செலவுகளை கூட என்னால் பார்த்துக் கொள்ள முடியவில்லை. எனவே இந்த வீடியோவை பார்க்கும் தொழிலதிபர்கள், பிரபலங்கள் என்னுடைய குடும்பத்திற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் facebook லைவ்- ஐ பார்த்த அவரின் குடும்பத்தினர் இதுகுறித்து காவல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அந்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்கு முன்பு அந்த நபர் தன்னுடைய அலுவலகத்தின் வேலை பார்க்கும் ஒரு பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்துள்ளார்.

பின்பு அந்த நபரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.