திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஈபி நகர் பகுதியில் முருகன்-ரேகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் பாக்கியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த சிறுமி நேற்று முன் தினம் மாலை வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமியின் கழுத்தில் சேலை இறுக்கியதால் மூச்சுத்திணறி மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக ஆரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
