இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் தன்னுடைய We care திட்டத்தின் மூலமாக ராமர் கோவிலின் மெய்நிகர் தரிசனத்தை வழங்குகின்றது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 360 டிகிரி விர்ச்சுவல் அனுபவத்தின் மூலம் அயோத்தி ராமர் கோவிலை சுற்றி பார்க்க முடியும். கோவிலின் புனிதமான மண்பாண்டகளுக்குள் நிற்பது போல ஒவ்வொரு கோணத்திலும் கோவிலை கண்டு அனுபவிக்க முடியும்.

JioDive பயனர்கள் Jiolmmerse செயலியை பயன்படுத்தி virtual reality ஐ காண முடியும். கோவிலின் கருவறை, பிரதான பிரார்த்தனை மண்டபம் மற்றும் முற்றங்கள் உள்ளிட்ட பல அறைகளை பயனர்கள் சுற்றி வரலாம். ராமர் கோவிலின் 360 டிகிரி மெய்நிகர் சுற்றுப்பயணம் ஜியோ டிவியில் பிரத்தியேகமாக கிடைக்கும். இதனை இந்தியாவில் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.