ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. அனைத்து வேலைகளுக்கும் ஆதார் என்பது அடிப்படை ஆவணமாக உள்ளதால் மத்திய அரசு ஆதார் அட்டையை எடுத்து 10 ஆண்டு கடந்த பிறகு அனைவரும் தங்களுடைய விபரங்களை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என சமீபத்தில் அறிவுறுத்தியது. அதேசமயம் மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் அடிக்கடி மாறும் நிலை இருப்பதால் இவற்றை ஆதாரில் அப்டேட் செய்வது அவசியம்.

அரசின் திட்டங்களின் பலன்களை பெற விண்ணப்பிக்கும் போது இதுபோல மொபைல் எண்ணை ஆதாரில் அப்டேட் செய்யாதவர்கள் சிரமப்படுகின்றனர். இதற்காக ஆதார் மையத்திற்கு இவர்கள் செல்ல வேண்டும். அங்கு ஆதார் அப்டேட்டுக்கு விண்ணப்பித்து 20 நாட்களுக்குள் அப்டேட் பணிகள் செய்து முடிக்கப்படும். எனவே உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை மாற்றும்போது அவற்றை உடனடியாக ஆதாரில் அப்டேட் செய்ய வேண்டும் என்று மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் குறுகிய காலத்திற்கு வரும் அரசு திட்டங்களை மக்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.