இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே நாம் எதிர்பார்க்கும் பட்ஜெட்டை விட தாண்டி தான் செல்கிறது. அப்படியான சூழலை திருமணம் செய்யும் அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். இந்த திருமண செலவுகளுக்கு கடன் பெறுவதற்கான நான்கு முறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

EPF மீதான கடன்:

நீங்கள் ஏதாவது ஒரு வேலையில் இருந்தால் உங்களுடைய பிஎஃப் கணக்கில் கடன் வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது நீங்கள் உங்களுடைய வேலையை ஏழு வருடங்கள் முடித்து இருந்தால் உங்கள் சொந்த திருமணம் மற்றும் குழந்தைகள் மற்றும் சகோதர சகோதரிகள் எந்த குடும்பத் திருமணத்திற்கும் பி எப் கணக்கில் இருந்து நீங்கள் பணம் எடுக்க முடியும்.

எல் ஐ சி பாலிசிக்கு எதிரான கடன்:

எல் ஐ சி பாலிசியை பயன்படுத்தாமல் பணத்தை ஏற்பாடு செய்து. எல் ஐ சி யின் அனைத்து பாலிசிகளிலும் கடன் பெறும் வசதி உள்ளது. உங்களுடைய பாலிசியில் இது போன்ற வசதி இருந்தால் பாலிசியில் சரண்டர் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் பெற முடியும். இந்த கடனை கொடுக்கும் போது காப்பீட்டு நிறுவனம் உங்களுடைய பாலிசியை அடமானம் வைக்கும். பாலிசிக்கு எதிராக கடன் பெறுவதற்கு நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தங்க கடன்:

திடீரென பணத்தேவை ஏற்படும்போது வீட்டில் உள்ள தங்கத்தை அடமானம் வைத்து பணம் பெறலாம். இது ஒரு வருடம் முதல் மூன்று ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ள முடியும். தங்க கடனின் கீழ் 50 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.

தனிப்பட்ட கடன்:

இந்தியாவில் எந்த ஒரு வங்கியில் இருந்தும் தனிநபர் கடனை பெற முடியும். உங்களுடைய மாத வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகிய விவரங்களை வைத்துக்கொண்டு இந்த கடன் வழங்கப்படும். கடனை வாங்கும் போது உங்களுடைய சம்பள ரசீது, புகைப்படம் மற்றும் கேஒய்சி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். கடனை திருப்பி செலுத்துவதற்கு உங்களுக்கு 60 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது m