தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு வேட்டையன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூலி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது கூலி படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. இவர் கூலி படத்தில் ரஜினியின் நண்பராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 38 வருடங்களுக்கு பிறகு நடிகர் ரஜினி மற்றும் சத்யராஜ் சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். மேலும் இந்த புதிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.