தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் சூட்டிங்கும்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்திடம் உங்களுடைய படங்கள் ஏன் சரியாக ஓடவில்லை என்று கேட்கப்பட்டதற்கு அவர் கோபப்பட்டு பதில் அளித்தார். இது தொடர்பாக அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

அதில் நீங்கள் நன்றாக நடித்தாலும் உங்கள் படங்களின் ஓடுவதில்லை என கேட்கப்பட்டது. நீங்கள் சரியான கதையை தேர்வு செய்யாததால் தான் படங்கள் ஓடவில்லையா என்றும் கேட்கப்பட்டது. இதற்கு நடிகர் அஜித் நான் ஒரு நடிகன். என்னுடைய வேலை நடிப்பது மட்டும்தான். படம் ஓடினால் அதற்கு இயக்குனர் தான் காரணம். அப்படி இருக்கும்போது படம் தோல்வியடைந்தால் நான் எப்படி காரணமாக இருக்க முடியும். ஒரு படம் ஓடும் என்று எனக்கு உறுதியாக தெரிந்தால் நான் நடிகராக இருந்திருக்க மாட்டேன். இயக்குனராக மாறியிருப்பேன். மேலும் படம் ஓடவில்லை என்றால் அதற்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தான் காரணம் என்று கூறியுள்ளார்.