காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இளம் பெண்கள் 3 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஏகனாம் பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அந்த வீட்டில் மின்விசிறி சரியாக வேலை செய்யாததால் இரவில் மொட்டை மாடியில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் இளம் பெண்களின் செல்போன்களை திருடியுள்ளனர். இதனால் அந்த பெண்கள் தங்கள் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது ஒரு நபர் அவர்களை ஆசைக்கு இணங்குமாறு கூறி பேசியுள்ளார். அந்த சமயத்தில் சிலர் அவரின் ஆசைக்கு இணங்குமாறு கூறி நைசாக பேசி அவரை வரவழைக்குமாறு கூறினர்.

இதைக்கேட்ட இளம் பெண்கள் வாலிபரின் ஆசைக்கு இணங்குவதாக கூறி அவரை ஒரு இடத்திற்கு வரச் சொல்லியுள்ளனர். இதை நம்பி அந்த வாலிபர் அங்கு சென்ற நிலையில் பொதுமக்கள் அவரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்பது தெரிய வந்தது. இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அதில் வரும் பணத்தை வைத்து ஜாலியாக இருந்துள்ளார். இவர் இதுவரை 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது தன்னுடைய அக்கா வீட்டில் இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.