
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாமுவேல்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டார். சாமுவேலுக்கு துணையாக அவரது மகள் சிந்தியா(35) இருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக வீடு போட்டி கிடந்தது ஏன நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தந்தையும் மகளும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது மருத்துவரான எபநேசர் என்பவர் சாமுவேலுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க வந்தார். வீட்டில் சிகிச்சையில் இருந்த போது சாமுவேல் உயிரிழந்தார். இது தொடர்பாக எபனேசருக்கும் சிந்தியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எபனேசர் சிந்தியாவை தள்ளிவிட்டார். இதனால் சிந்தியா உயிரிழந்தார். அதன் பிறகு அச்சத்தில் வீட்டை பூட்டிவிட்டு எபனேசர் தப்பி ஓடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.