உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலம் மற்றும் கடன் வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 35 பேரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபர், பொதுமக்களால் தர்ம அடி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த கிருஷ்ண பிரகாஷ் சிங்கானியா என்ற நபர், குறைந்த விலையில் வீடு மற்றும் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை சனிகாவா பகுதியில் அந்த நபர் இருப்பதை அறிந்த பாதிக்கப்பட்ட மக்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்டனர். அப்போது அவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், மோசடி நபரை சரமாரியாகத் தாக்கினார். வெறும் 6 வினாடிகளில் அந்த நபருக்கு 9 கன்னத்தடிகளை வழங்கிய அந்தப் பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கூறுகையில், “வீடு வாங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி என் அப்பாவை இந்த நபர் ஏமாற்றினார். அந்த மன உளைச்சலிலேயே என் அப்பா உயிரிழந்துவிட்டார்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கான்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முப்பதாறுக்கும் மேற்பட்டவர்களிடம் இந்த நபர் பல லட்ச ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

“>

 

பொதுமக்கள் பிடியில் சிக்கிய அந்த நபரை மீட்ட போலீசார், தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.