இன்ஸ்டாகிராமிலும் X-ல் வைரலாகப் பரவிய ஒரு பதிவு, குஜராத்தின் சூரத்தில் வசிக்கும் நலினி உணாகர் என்ற பெண்ணின் வீட்டு வேலைக்காரி பற்றிய ஆச்சரியமான கதையை வெளிப்படுத்துகிறது. நலினி தனது X பதிவில், தனது வேலைக்காரி 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3BHK அப்பார்ட்மென்ட் வாங்கியதாகவும், அதற்காக வெறும் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கடன் வாங்கியதாகவும் தெரிவித்தார்.

மேலும், அந்தப் பெண் 4 லட்சம் ரூபாயை வீட்டு அலங்காரத்திற்கு (ஃபர்னிஷிங்) செலவிட்டதாகவும் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நலினி, “நான் திகைப்பில் அமைதியாக நின்றேன்” என்று எழுதினார். இந்தச் செய்தி இணையத்தில் வேகமாகப் பரவி, பலரை வியப்பில் ஆழ்த்தியது.

அந்த வேலைக்காரி, இது தனது முதல் சொத்து இல்லை என்றும், ஏற்கனவே வெலான்ஜா கிராமத்தில் இரண்டு மாடி வீடும் ஒரு கடையும் வைத்திருப்பதாகவும், அவை வாடகைக்கு விடப்பட்டு வருவதாகவும் கூறினார். இணைய பயனர்கள் இதை “வரி செலுத்தப்படாத பணத்தின் மந்திரம்” என்று குறிப்பிட்டு விவாதித்தனர்.

சிலர், மத்திய வர்க்கத்தினர் வரி கட்டுவதால் பாதி சம்பளத்தை இழப்பதாகவும், வேலைக்காரிகள் போன்றவர்கள் வரி இல்லாமல் விரைவாக சேமிப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். அதேநேரம், அவரது கடின உழைப்பையும் சிலர் பாராட்டினர். இந்த வைரல் பதிவு, நிதி மேலாண்மை, சேமிப்பு மற்றும் சமூகத்தில் நிலவும் வரி அமைப்பு குறித்து ஆழமான சிந்தனையைத் தூண்டியுள்ளது.