இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு காணொளி, கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண் முதல் முறையாக இந்தியாவின் பிரபலமான பார்லே-ஜி பிஸ்கட் சாப்பிடும் அனுபவத்தைப் பகிர்கிறது. இந்தியாவின் பன்முகத் தன்மையும் கலாச்சாரமும் உலகம் முழுவதும் உள்ளவர்களை ஈர்க்கிறது, குறிப்பாக இந்திய உணவுகள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். பார்லே-ஜி பிஸ்கட், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வீடுகளில் பிரபலமாக இருக்கும் ஒன்று. காணொளியில், அந்தப் பெண் கேமராவின் முன்னால் பார்லே-ஜி பேக்கெட்டைப் பிடித்து நிற்கிறார். கேமராவின் பின்னால் உள்ள நபர், இது இந்தியாவின் பிரபலமான பிஸ்கட் என்றும், அதன் பேக்கேஜிங் மாறாமல் இருப்பதாகவும் விளக்குகிறார். பின்னர், அவர் பேக்கெட்டைத் திறந்து ஒரு பிஸ்கட்டை எடுத்து சாப்பிடுகிறார்.
அந்தப் பெண் சாப்பிட்ட பிறகு, கொலம்பியாவில் ஒத்த சுவையுள்ள பிஸ்கட் சாப்பிட்டதாகக் கூறினாலும், பார்லே-ஜியின் சுவை தனக்கு நன்றாக இருந்ததாகப் பாராட்டுகிறார். இந்த இயல்பான ரியாக்ஷன், இந்தியர்களின் இதயங்களைத் தொட்டது. இந்தக் காணொளி, veggmomo என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டு, 21 ஆயிரத்திற்கும் மேல் பார்வைகளைப் பெற்றுள்ளது. கேப்ஷனில், கொலம்பியப் பெண்ணின் நேர்மையான ரியாக்ஷன் இந்த பிரபல பிஸ்கட்டின் சுவையை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நெட்டிசன்கள், “பார்லே-ஜி நமது குழந்தைப் பருவ நண்பர்” என்று கூறி நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். சிலர், “இதை டீயில் திளத்தி சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்” என்று கமெண்ட் செய்துள்ளனர். இது இந்தியாவின் ‘மலிவான மகிழ்ச்சி’ என்று பலரும் பாராட்டியுள்ளனர்.
