வேலூர், அகரம்சேரியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.

கூட்டத்திற்கு அனுமதி சீட்டு (Pass) உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கடும் வெயில் காரணமாகக் கூட்டம் கட்டுப்படுத்தப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. முக்கிய சாலைகளில் போலீசாரின் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால், தங்கள் தலைவன் விஜய்யைத் தரிசிக்க வந்த பல தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

“>

ஆனால், “தடுப்புகளைப் போட்டு எங்களைத் தடுக்க முடியாது” என்ற வேகத்தில், ஆர்வமிகுதியால் வந்த ரசிகர்கள் பிரதான சாலைகளைத் தவிர்த்து, அருகில் இருந்த தென்னந்தோப்புகள் மற்றும் விளைநிலங்கள் வழியாகப் புகுந்து மாற்றுப் பாதைகளில் மைதானத்தை நோக்கிப் படையெடுத்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பல கிலோமீட்டர் தூரம் பொடிநடையாகவே தென்னந்தோப்புக்குள் நடந்து சென்று விஜய்யைக் காண அவர்கள் காட்டிய இந்த ‘வெறித்தனமான’ அன்பு வேலூர் மாவட்டத்தையே வியக்க வைத்தது. “எங்கள் தலைவனைப் பார்க்க எந்தத் தடையும் ஒரு பொருட்டல்ல” எனத் தென்னந்தோப்பு வழியாகச் சென்ற தொண்டர்களின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.