தமிழக அரசியல் அரங்கில் தற்போது பேசுபொருளாகியுள்ளது கரூர் துயரச் சம்பவத்தைச் சுற்றியுள்ள விஜய் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கைகள். காவல்துறையினரால் கொல்லப்பட்ட அஜித் அவர்களின் குடும்பத்தினரை ஆதரிக்க விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் வீடியோ காலின் மூலம் குடும்பத்தாரிடம் பேசினார். ஆனால், தற்போது கரூர் சம்பவத்தில் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது — இம்முறை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளதோடு, விஜய் அவர்கள் வீடியோ காலின் மூலம் பேசினார். இந்த மாற்றம் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏன்டா லூஸு மோகா..
வீடியோ கால்ல பேசுறவன் தலைவன் இல்லைன்னு சொன்ன.. 🤡
இப்போ நொண்ணன் வீடியோ கால்ல பேசிட்டு இருக்கான் @TVKVijayHQ 😂😂😂🗣️💦pic.twitter.com/agyQHtTXAw
— 𝗧𝗵𝗮𝗿𝘀𝗵_ 💫 (@TharshDoi_) October 7, 2025
“>
இதனை விமர்சிக்கும் வகையில், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் முன்பு கூறிய வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் அவர் “எங்கள் தலைவர் வீடியோ காலில் வரக்கூடியவர் அல்ல; வீட்டிற்கே நேரில் வரக்கூடியவர்” என்று பெருமையாக கூறியிருந்தார். ஆனால் தற்போது அதே தலைவர் வீடியோ காலின் மூலம் ஆறுதல் கூறியிருப்பது எதிர்க்கட்சித் தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
