நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பரப்புரை நிகழ்த்தினார்.
அப்போது கூட்டத்தில் சிலர் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் கொடியை பிடித்து நின்றதைக் காண்பித்த ஈபிஎஸ், “அதோ பாருங்க, கொடி பறக்குது… பிள்ளையார் சுழி போட்டாங்க… எழுச்சி ஆரவாரம்…” என தெரிவித்தார். இதனுடன், “அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி தான் வலுவான கூட்டணி” எனவும் அவர் வலியுறுத்தினார்.
BREAKING – தவெக உடன் கூட்டணியை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.. #ThalapathyVijay #TVKVijay #EdappadiPalaniswami pic.twitter.com/cxSjhvgRvL
— The_Introverter (@JOHN_WICK0702) October 8, 2025
“>
ஈபிஎஸ் கூறிய இந்த கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜய் தலைமையிலான தவெக கட்சியை நேரடியாக எதையும் குறிப்பிடாமல், ஆனால் தனது உரையில் இணைத்திருப்பது, எதிர்கட்சிகளுக்கு சவால் விடுத்ததுபோலவே உள்ளது. இந்த உரை தற்போது சமூக ஊடகங்களிலும் அரசியல் ஆதரவாளர்களிடையிலும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
