கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் மற்றும் அவரது கட்சி மீது ஏன் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கேள்வி தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
நீதிமன்றமே நேரடியாக “ஏன் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை? ஏன் அவரது பிரச்சார வாகனம் பறிமுதல் செய்யப்படவில்லை? ஏன் கட்சியின் பொதுச் செயலாளர் கைது செய்யப்படவில்லை?” என்று தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் “இது முதலமைச்சரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்” என்று பதிவிட்டு, தமிழக அரசின் முடிவை பாராட்டி வருகின்றனர்.
“விஜயை கைது செய்திருந்தால், அவர் உடனே உச்ச நீதிமன்றத்துக்கு ஓடி பிணையில் வந்து, தன்னை பாதிக்கப்பட்டவர் என காட்டி அரசியல் ஆதரவைப் பெற முயன்றிருப்பார்” என்ற கருத்தும் சிலரிடையே பரவியுள்ளது.
அந்த முயற்சிகளை முறியடிக்கவே முதலமைச்சர் அமைதியான ஆனால் கூர்மையான அரசியல் யோசனையுடன் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
முதலமைச்சரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
வேறு யாராக இருந்தாலும், இந்நேரம் விஜய் முதல் ஆனந்த் வரை எல்லாரையும் கைது பண்ணியிருப்பாங்க. ஆனா, கைது ஆனவுடனே உச்ச நீதிமன்றத்துக்கு ஓடி, பிணையில வந்து, அதே தற்குறி கும்பலை கூட்டி ஒண்ணு திரட்டி, அதிமுக, பாஜக மாதிரியான அரசியல் கட்சிகளை… pic.twitter.com/2f2TcNESqR
— Surya Born To Win (@Surya_BornToWin) October 7, 2025
“>
இதனால் தற்போது விஜய் தலைமறைவாக வாழ்ந்து, மக்கள் மனதில் எதிர்மறையான படிமத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் எனவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்களில் அவரை குறிவைத்து மீம்களும் கேலி கருத்துக்களும் பரவியுள்ளன. இதனால் விஜயின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி தற்போது தமிழ்நாட்டில் புதிய ஆர்வத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
