சின்னத்திரையில் பிரபலமாக விளங்கி, பின்னர் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த ரோபோ சங்கர் (46), உடல்நலக்குறைவால் நேற்று இரவு 8.30 மணியளவில் காலமானார்.
சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி மீண்டும் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அவரது உடல் தற்போது சென்னையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வேளையில், அவரது குடும்பத்தினர் கண்ணீரில் கரைந்தபடி இருந்தனர். குறிப்பாக, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ரோபோ சங்கரின் உடலை பார்த்தபடி உறைந்து நின்ற காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. ரோபோ சங்கரின் திடீர் மறைவால் திரையுலகமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
கண்ணீரில் கரைந்த குடும்பம்… ரோபோ சங்கர் உடலை பார்த்தபடி உறைந்து நின்ற விஜய் ஆண்டனி#VijayAntony #RIPRoboShankar #RoboShankar pic.twitter.com/KHHFmxI4L6
— PttvOnlinenews (@PttvNewsX) September 19, 2025
“>
“கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என விஜய் ஆண்டனி இரங்கல் தெரிவித்துள்ளார்.
