தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர் நேற்று மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று இரவு முதலே  திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தற்போது ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் கண் கலங்கிய நிலையில் அஞ்சலி செலுத்திய நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்துஜா மிகவும் கதறி அழுதபடி நிலைகுலைந்து நின்ற சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் ரோபோ சங்கர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்