தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கிய ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் நேற்று (செப்டம்பர் 18) இரவு காலமானார்.

அவரின் திடீர் மறைவு திரைத்துறையினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அவர் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவாகும்.

அந்த நிகழ்ச்சியில் ரோபோ சங்கர், முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் ஆகியோருடன் கலகலப்பாக உரையாடி, கமல்ஹாசனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்போது அவரது நகைச்சுவை பாணி அனைவரையும் சிரிக்க வைத்திருந்தது. இன்று அவரது மறைவு அந்தக் காட்சியை நினைவுகூரும் ரசிகர்களின் மனதில் இரங்கலையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“>