தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர் நேற்று மஞ்சள் காமாலை நோயினால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரகங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,

நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர். நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.