மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பள்ளி மாணவன் ஒருவன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவாலியரைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுவனை, அதே பகுதியைச் சேர்ந்த ஷிபு சர்மா என்ற இளைஞர் ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார்.
அந்த அப்பாவி சிறுவனைத் தனது இடத்திற்கு வரவழைத்த ஷிபு சர்மா, அவனிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், அதைத் தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளார்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டிய அந்த இளைஞர், பல நாட்களாக அந்தச் சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது நண்பனான சூரஜ் பிரஜாபதி என்பவனையும் அழைத்து வந்து, இருவரும் சேர்ந்து அந்தச் சிறுவனை மிகக்கடுமையாகத் தாக்கிச் சீரழித்துள்ளனர்.
உடல்நிலை மோசமடைந்த சிறுவன் தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே நடந்த கொடுமைகளைச் சொல்ல, அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தற்போது சூரஜ் பிரஜாபதியை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ஷிபு சர்மாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
